மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிகளின் தணிக்கை அறிக்கை: தமிழ்நாடு அரசுக்கு அங்கீகாரச் சான்றிதழ்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தேசிய மாவட்ட கனிம அறக்கட்டளை பயிற்சிப்பட்டறையின்போது தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) நிதிகளின் தணிக்கை அறிக்கைகளை 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவு செய்ததற்காக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய மாவட்ட கனிம அறக்கட்டளை பயிற்சிப்பட்டறை (National DMF Workshop) டெல்லியில் ஒன்றிய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தலைமையில் சுரங்கத் துறை இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, திட்டத்தின் தொடக்கத்திலிருந்து 2023-24 நிதியாண்டு வரை மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) நிதிகளின் தணிக்கை அறிக்கைகளை 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவு செய்ததற்காக நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அரசுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பாக, தமிழ்நாடு அரசின் டெல்லி தமிழ்நாடு இல்லம் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.