மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!
Advertisement
இந்த நிலையில், தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "வரும் 19ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும்.ஆகவே கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement