மாருதி கார்களுக்கும் தள்ளுபடி சலுகை அறிவிப்பு
மாருதி கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ், பலேனோ, இக்னிஸ், எக்எல்6, இன்விக்டோ, சியாஜ் மற்றும் ஜிம்னி ஆகிய கார்களுக்கும் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்சா டீலர்களிடம் இந்த சலுகை கிடைக்கும்.
கிராண்ட் விட்டாராவுக்கு ரூ.1.75 லட்சம் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். இதில் ரூ.60,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.80,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.35,000 வரை மதிப்புடைய நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்டவை இதில் அடங்கும். 2024ம் ஆண்டு மாடல் கிராண்ட் விட்டாரா பெட்ரோல் வேரியண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.55 லட்சம் வரையிலும், சிஎன்ஜி வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ.40,000 வரையிலும் சலுகை பெறலாம். 2025 மாடலாக இருந்தால் கிராண்ட் விட்டாரா ஹைபிரிட்டுக்கு ரூ.1.55 லட்சம் வரையிலும், பெட்ரோல் வேரியண்டுக்கு ரூ.1.35 லட்சம் வரையிலும் சலுகை உண்டு.
பலேனோ காரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் தற்போது 6 ஏர்பேக்குகளுடன் வந்துள்ளது. இதற்கு அதிகபட்சமாக ரூ.90,000 வரை சலுகை கிடைக்கும். ரூ.55,000 மதிப்புடைய ரீகல் கிட், ரொக்க தள்ளுபடி ரூ.5,000, டெல்டா ஏஎம்டி வேரியண்டுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.30,000, கிடைக்கும். 2024ம் ஆண்டு மாடலுக்கு ரூ.95,000 வரை சலுகை உண்டு.
பிரான்க்ஸ் காருக்கு ரூ.30,000 ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 கிகிராப் போனஸ், ரூ.43,000 மதிப்பு வெலாசிடி எடிஷன் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை சேர்த்து அதிகபட்சமாக ரூ.88,000 வரை சலுகை பெறலாம்.
இதுபோல், மாருதி இன்விக்டோவுக்கு ரூ.1.4 லட்சம் வரையிலும் ஜிம்ஜிக்கு ரூ.70,000 வரையிலும், இக்னிஸ் காருக்கு ரூ.60,000 வரையிலும், சியாஸ் காருக்கு ரூ.45,000 வரையிலும், எக்ஸ்எல்6க்கு ரூ.35,000 வரையிலும் தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். மேற்கண்ட சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை எனவும், நகரத்துக்கு நகரம் இந்த சலுகைகள் வேறுபடலாம் எனவும் நெக்சா டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.