தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தி பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் எச்சரிக்கை

சென்னை: தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம், சென்னை தலைமை செயலகத்தில் பேட்டியளிக்கும் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் தீபக்நாதன் கூறியதாவது: அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், உள்ளாட்சி அமைப்புகளை அவங்க கையிலே வைத்து விட்டு, 3வது படித்தவங்களை, நொண்டியை, மொடத்த, படிக்காதவங்களை பிஎல்ஓக்களாக போட்டு விட்டு என்று பேசியுள்ளார். மாற்றுத்திறனாளிகளை எந்த வார்த்தையில் எல்லாம் பேசக்கூடாதோ, அந்த வார்த்தைகளை எல்லாம் பேசியிருக்கிறார். இழிவாக பேசியிருக்கிறார் ஆதிராஜாராம்.

Advertisement

இத்தனை ஆண்டு காலம் கட்சியில் இருந்து இருக்கிறேன் என்று சொல்றீங்களே? இது எங்கே இருந்து பிறந்து வந்தது தெரியுமா? எம்ஜிஆர் வழித்தோன்றலாக உங்களை பிதற்றி கொள்கிறீர்களே? அப்படியிருக்கும் போது எப்படி இந்த வார்த்தைகளை பேச துணிந்து இருக்கிறீர்கள். மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்று சொல்லியிருக்கக்கூடிய பெரியாரின் வழித்தோன்றலில் வந்தவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா?. யார் கற்று கொடுத்தார்கள் இந்த அரசியலை, சமூக நீதி அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு.

சமூக நீதியின் முதல் பாடம் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் ஒரு மாவட்ட செயலாளரா?. இது தான் உங்கள் அரசியல் கட்சி சொல்லியிருக்கிறதா? இந்த வார்த்தைகளை நீங்கள் பின்வாங்க வில்லை என்றால், இந்த இழிச்சொற்களை நீங்கள் பின்வாங்கவில்லை என்றால், பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நிச்சயமாக உங்கள் இல்லத்திலே நாங்கள் போராட்டம் நடத்துதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் தயங்காது. என்ன பேச்சு இது. யார் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement