மாற்றுத்திறனாளிகளை திவ்யாங் என குறிப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்
திருச்சி: மாற்றுத்திறனாளிகளை திவ்யாங் என குறிப்பிடுவதை சர்வதேச அளவில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக ஒன்றிய அரசு மாற்ற வேண்டும் என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார் அப்போது அவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் மற்றம் செய்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும். உள்ளாட்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டம் மூலம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் இந்தி மொழி பெயர்ப்பு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.