மாற்றுத்திறன் பட்டியலில் 9 உடல் பாதிப்புகளை சேர்க்க அரசு குழு மறுப்பு
புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் அத்துறையின் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் கடந்த 20ம் தேதி நடந்தது. இதில், ஆஸ்துமா, கால் கை வலிப்பு மற்றும் ஒற்றை பக்க காது கேளாமை, ஆஸ்டமி, முக்கிய உறுப்பு செயலிழப்பு, குரல்வளை நீக்கம், இக்தியோசிஸ் உள்ளிட்ட 9 உடல் பாதிப்புகளை மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் பட்டியலில் சேர்க்க வேண்டுமென பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அளித்த பரிந்துரை குறித்து மதிப்பிடப்பட்டது. கூட்டத்தில், எந்த மருத்துவ நிலைகளும் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்யப்பட்டு, பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.
Advertisement
Advertisement