நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இப்படிபட்ட சூழலில், அரசு போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement