திண்டுக்கல், அருப்புக்கோட்டையில் விபத்து தம்பதி, மகன், மகள் உட்பட 9 பேர் பலி
Advertisement
மரத்தில் மோதி பலி: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(43). ஆசிரியர். கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பாலமுருகன் கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் பகுதியை சேர்ந்த மணி(18), சின்னத்துரை(22), நெல்லை மாவட்டம், நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராசிக் ஆகிய 4 பேர், காரில் வெளியூர் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டை அருகே சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் சென்றபோது, கார் திடீரென சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் பலியாகினர்.
Advertisement