திண்டுக்கல் அருகே கொய்யாப்பழங்களை சாலையில் வீசிய அவலம்
*விபரீதம் அறியாமல் அள்ளிய மக்கள்
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சாலையில் வீசப்பட்ட கொய்யா பழங்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு நான்கு வழிச்சாலையில் உள்ள அழகு சமுத்திரப்பட்டி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த சிலர், ஹைபிரிட் கொய்யா பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக கொய்யாப்பழங்களை அள்ளி சென்றனர். பழங்களை கொட்டியவர்களிடம் அங்கிருந்தவர்கள் கேட்டபோது, ‘‘ஏற்றுமதிக்காக வைத்திருந்த பழங்கள், கடைசி நேரத்தில் ஏற்றுமதியாளர் வேண்டாம்’’ என்று கூறியதால் கொட்டியதாக கூறியுள்ளார்.
இதுபோன்று சாலையோரம் கொட்டப்படும் பழங்களின் தன்மைகள் எவ்வாறு உள்ளது என்பது தெரியாமல் பொதுமக்கள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானதாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement