மகிழ்ச்சிக்கு வழி

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது ஒரு முக்கிய இலக்கு. இதற்கு பெரும்பங்களிப்பது போக்குவரத்து. இந்த போக்குவரத்தை பொறுத்தவரையில் ரயில்கள், பஸ்களில் பயணிப்பது தான் பொதுமக்களின் முதல் தேர்வாக உள்ளது. அதிலும் குறிப்பாக நடுத்தர மக்களின் பயணம்...

அடியோடு ஒழிப்போம்

By Ranjith
17 Oct 2025

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து, அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.  இந்த ஆணையத்தில், சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றுவியல் அறிஞர்கள் இடம் பெறுவார்கள்....

எல்லாமே அரசியல்

By Karthik Yash
16 Oct 2025

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜே.பி.பூங்காவில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பொதுமக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த தொகுதி பாஜ எம்எல்ஏ முனிரத்னா ஆர்எஸ்எஸ் தொப்பி அணிந்து வந்து முன்னிருக்கையில் அமர்ந்தார். ஏற்கனவே காங்கிரசில் இருந்த நண்பர் என்ற முறையில் கருப்பு தொப்பி எம்எல்ஏ முனிரத்னா மேடைக்கு வாருங்கள் என்று...

மருத்துவ மாபியா

By Ranjith
15 Oct 2025

மத்திய பிரதேச மாநிலம் சந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் இருமல் மருந்து குடித்து பலியானார்கள். டாக்டர் பிரவீன் சோனி அவர்களுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார். காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிய ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் ஆபத்தான டை எத்திலீன்...

தேர்தல் பரபரப்பு

By Ranjith
14 Oct 2025

நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி. இரண்டாம் கட்டமாக 122 தொதிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய வரும்...

கட்டண கொள்ளை

By Ranjith
12 Oct 2025

பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே பலருக்கும் பயணங்கள் கசப்பாகிவிடும். அதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலையின் நிமித்தம் குடியிருப்போர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப படும் பாடு சொல்லி மாளாது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பெருநகரங்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும், பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் நகரத்திற்கு திரும்பவும் பயணம்...

புதிய அத்தியாயம்

By Karthik Yash
11 Oct 2025

5 ஆயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. இந்த வகையில் ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள். ஒன்றிய, மாநில அரசுகளை போல, உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பணிகளும் தொய்வின்றி தொடர வேண்டும் என்பதற்காக நடத்தப்படுபவை கிராமசபை கூட்டங்கள். உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்கவும், கேள்விகள்...

தொழில் வளர்ச்சி

By Karthik Yash
10 Oct 2025

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் சார்பில் “உலக புத்தொழில் மாநாடு-2025” கோவையில் நடந்து முடிந்துள்ளது. இம்மாநாட்டில், 39 நாடுகளை சேர்ந்த, 264 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். விண்வெளி தொழில்நுட்பம், காலநிலை மாற்ற மேலாண்மை, மின் வாகன தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புத்தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள்,...

தமிழகம்... ஏறுமுகம்

By Karthik Yash
08 Oct 2025

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த 2023-2024ம் நிதியாண்டிற்கான தொழில்துறை ஆய்வறிக்கையின்போது தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் இது அபரிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள...

சுப்ரீம்கோர்ட் அதிரடி

By Karthik Yash
07 Oct 2025

பீகார் மாநிலத்தில் நவ.6 மற்றும் நவ.12ம் தேதி என இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவே ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளது. காரணம் சார்(SIR)... அதாவது, Special Intensive Revision எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. இதன்படி, பீகாரில்...