அக்னி பரீட்சை

கடந்த 2022, ஜூன் 14ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் ‘அக்னிபாத்’ திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இளைஞர்களை ராணுவத்தில் அதிகளவில் சேர்ப்பதற்காகத்தான் இந்த திட்டம் எனவும், பாதுகாப்புப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்...

‘எஸ்ஐஆர்’... உஷார்

By Karthik Yash
28 Oct 2025

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை மனதில் கொண்டு பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் (SIR) எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியலை முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரை அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். இது...

எச்சரிக்கை தேவை

By Arun Kumar
27 Oct 2025

  பீகார் சட்டசபை தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, அம்மாநிலத்தில் தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகளவில் நீக்கப்பட்டதாக,...

களங்கம்

By Ranjith
26 Oct 2025

ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள், சுகாதார திட்டங்கள், குழந்தைகள் நல்வாழ்வு திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை கொண்டுள்ள எல்ஐசியானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இன்றளவில் முதலீடு செய்திட நல்லதொரு நிறுவனமாக எல்ஐசி காணப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்காலம் தொடங்கிய நாளில் இருந்தே, பொதுத்துறை...

பின்பற்றுமா?

By Karthik Yash
25 Oct 2025

அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், இதர நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தனது ஆலோசனையை ஏற்காமல், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு, பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்காக இந்தியாவை மையப்படுத்தியும், சில நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்....

அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம்

By Karthik Yash
24 Oct 2025

தமிழ்நாட்டில் தூய்மைப்பணியாளர்கள் நலனை காக்கும் வகையில் நலவாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. வாரியம் மூலம் உறுப்பினர்களுக்கு மகப்பேறு உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஓய்வூதியம், நிவாரணத் தொகை மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டங்கள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நாளும்...

திக்கி… திணறும் மக்கள்

By Karthik Yash
23 Oct 2025

பசுமை நகரம், குளிர் நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூரு மெல்ல மெல்ல காற்று மாசு, தூசு நகரம் என்று பெயர் பெற்று வருகிறது. இதற்கு காரணம் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தான். ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெங்களூருவில் முதலீடு செய்துள்ளதால் நாளுக்கு நாள் இந்தியாவில் இருந்தும்...

இயற்கை தரும் வரம்

By Karthik Yash
22 Oct 2025

தமிழகம், 70 சதவீத மழைப்பொழிவை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. இந்த காலமே தமிழகத்தின் முக்கியமான மழைக்காலம். இந்த மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிப்பது, மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது, மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது போன்றவையே நாம் எதிர்கொள்ள வேண்டியவை. ஆண்டு முழுவதுக்குமான குடிநீர்,...

தலைதூக்கும் போர்

By MuthuKumar
21 Oct 2025

இதோ டிரம்ப் தலையிட்டு விட்டார், போர் நின்றுவிட்டது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் காசா போர் அவ்வளவு எளிதாக முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடக்கும் மோதல்கள் அதைத்தான் காட்டுகின்றன. காசா- இஸ்ரேல் போர் காலங்காலமாக நடந்து வந்தாலும் உச்சகட்டமாக வெடித்தது 2023 அக்டோபர் 7ஆம் தேதி...

மகிழ்ச்சி பொங்கட்டும்

By Ranjith
19 Oct 2025

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியேற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும். தீபாவளிக்கான புராண கதைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்திய மக்கள் மனதில் இன்பத்தை பாய்ச்சும் பண்டிகையாகவே எப்போதும் தீபாவளி பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அந்தநாள் முதல் இந்த நாள் வரை தீபாவளியை ஒட்டி அரசு...