வாஷிங்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில், ஸ்பெயின் வீரர் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா (26), அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை (22), 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் ரோமன் (26), பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட்டை, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.