டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்கக் கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவு
Advertisement
மதுரை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர, தகுதியான டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்தக் கோரிய மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அரசு மருத்துவமனைகளில் உள்ள டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கை எத்தனை? பழுதாகியுள்ள டயாலிசிஸ் இயந்திரங்களின் எண்ணிக்கை எத்தனை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் டயாலிசிஸ் தொழில்நுட்பர்னர்களின் விவரங்கள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement