ட்ரோன் பைலட் ஆக தோனி புது அவதாரம்
Advertisement
சென்னை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் ட்ரோன் இயக்குவதில் முறைப்படி பயிற்சிகள் பெற்று வந்தார். அந்த பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்து ட்ரோன் பைலட் சான்றிதழை அவர் பெற்றுள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தூதராக செயல்பட்டு வரும் தோனி, அந்த நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். ட்ரோன் பைலட் ஆவதற்கான பயிற்சிகளை வெகு விரைவில் அவர் கற்று தேர்ந்ததாக, அந்த நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்தார்.
Advertisement