தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு இன்று முக்கிய அறிவிப்பு: அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
சாம்ராஜ்நகர்: தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிக்கை தாக்கல் செய்யப்படும என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார். இது குறித்து சாம்ராஜ்நகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக யாரும் அரசியல் செய்யக்கூடாது. எஸ்ஐடி விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடந்து வரும் போது தலையிடுவது சரியில்லை.
அதேபோல், தர்மஸ்தலா வழக்கு குறித்து இடைக்கால அறிக்கை கொடுப்பதா? அல்லது முழு விசாரணைக்கு பின்னர் அறிக்கை கொடுப்பதா என்பதை எஸ்ஐடியினர் முடிவு செய்வார்கள். இதில், நாங்கள் யாரும் தலையிடமாட்டோம். இந்த விவகாரத்தில் பாஜவினர் அரசியல் நோக்கத்துடன் பேசி வருகின்றனர். தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக இன்று பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.