தர்மஸ்தலாவில் தொடரும் எஸ்ஐடி சோதனை சிறுமி உடல் புதைக்கப்பட்டதா? புதிய புகார் குறித்து விசாரிக்க முடிவு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்தாக கோயில் முன்னாள் துப்புரவு தொழிலாளர் அளித்த புகாரின் பேரில் மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையில் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழியர் அடையாளம் காட்டிய 13 இடங்களில் 10 இடங்களை தோண்டி பார்த்த எஸ்ஐடி குழு 6வது இடத்தில் மனித எலும்புகளை கண்டெடுத்தது.
மேலும் பங்களாகுட்டே மலைப்பகுதியிலும் ஆண், பெண் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேத்ராவதி ஆற்றங்கரையோரம் 11வது இடத்தில் நேற்று தோண்டிய போது எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையில் தர்மஸ்தலாவை சேர்ந்த ஜெயந்த் என்பவர், 15 ஆண்டுக்கு முன்பு சிறுமியின் சடலத்தை போலீசார் வனப்பகுதியில் புதைத்தனர் என்று புகார் கூறியிருந்தார். இது குறித்தும் விசாரிக்க எஸ்ஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.