தர்மஸ்தலா பொய் புகார்; பெங்களூருவில் தீட்டிய சதி திட்டம்: எஸ்.ஐ.டி அதிரடி சோதனை
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக சின்னய்யா என்ற முன்னாள் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின்படி, எஸ்.ஐ.டி அவர் காட்டிய இடங்களில் தோண்டியதில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, புகார்தாரர் சின்னய்யாவை காவலில் எடுத்து எஸ்.ஐ.டி விசாரித்து வருகிறது. அவரை பெங்களூருவிற்கு அழைத்துவந்து விசாரித்தது.
பெங்களூரு பீன்யாவில் உள்ள ஜெயந்த்தின் வீட்டில் சின்னய்யா முன்னிலையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், பெங்களூரு வித்யாரன்யாபுராவில் உள்ள பி.கே.பிளாக்கில் உள்ள ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் நேற்று சோதனை நடத்தினர். இந்த அபார்ட்மென்ட்டில் 4-5 மாதங்கள் அறை எடுத்து இந்து அமைப்பின் தலைவர் மகேஷ் ஷெட்டி திமரோடி தலைமையில் 5 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அந்த சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் எஸ்.ஐ.டி அதிகாரிகள் ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் மிகத்தீவிரமாக சோதனை செய்தனர்.