தர்மஸ்தலா விவகாரத்தில் பொய் புகார் அளித்தவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு
பெங்களூரு : தர்மஸ்தலா விவகாரத்தில் பொய் புகார் அளித்த சின்னையா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைப்பு என சின்னையா புகார் அளித்திருந்த நிலையில், 15 இடங்களில் தோண்டியும் எலும்புக் கூடுகள் கிடைக்காததால், பொய் புகார் அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மண்டை ஓட்டுடன் வந்து புகார் அளித்த நிலையில் வழக்கில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. பொய்யான ஆதாரங்களை அளித்தல், மோசடி செய்தல் என்பது உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement