தர்மபுரியில் தவெக சார்பில் எடப்பாடியை வரவேற்று பேனர்: அரூர் கூட்டத்தில் கட்சி கொடியுடன் பங்கேற்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் பிரசார பயணத்தை தொடங்கினார். நேற்றும் (3ம் தேதி) பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு அரூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது நடிகர் விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் (தவெகவினர்) தங்கள் கட்சி கொடியுடன் கலந்து கொண்டனர்.
Advertisement
இதேபோல் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், பொம்மஅள்ளி கூட்ரோடு அருகே காரிமங்கலம் தவெக மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று விஜய், எடப்பாடி மற்றும் தனது படத்துடன் பேனர் வைத்திருந்தார். பின்னர் கட்சியின் அறிவுறுத்தலின்பேரில் நேற்று காலை அந்த பேனரை அவர் அப்புறப்படுத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement