தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மபுரி எஸ்பி ஆபிஸ் வளாகத்தில் மனு கொடுக்க வந்த நபர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிப்பு

தர்மபுரி: தர்மபுரி எஸ்பி ஆபிஸ் வளாகத்தில் மனு கொடுக்க வந்த கோழி பண்ணை உரிமையாளர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 60% தீ காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது...

தர்மபுரி: தர்மபுரி எஸ்பி ஆபிஸ் வளாகத்தில் மனு கொடுக்க வந்த கோழி பண்ணை உரிமையாளர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 60% தீ காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராஜா தோப்பு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (52) இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர் இதில் முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவியுடன் வாசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை என்பதால் தனது நண்பர் செல்வராஜ் என்பவரிடம் தனது நிலத்தின் பத்திரத்தை வைத்து பணம் கேட்டு உள்ளார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட நண்பர் செல்வராஜ் 10 லட்சத்திற்கு பத்திரத்தை அடமானம் வைத்து அதில் மூன்று லட்சம் மட்டும் ஜெயராமனிடம் கொடுத்துவிட்டு மீதி 7 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஜெயராமன் புகார் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து செல்வராஜ் இடம் இருந்து ஒரு பத்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள மற்றொரு பத்திரத்தை கொடுக்காமலும் பெற்ற பணத்தை கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததால் இது குறித்து ஜெயராமன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதனை சிறிதும் எதிர்பார்க்காத காவல்துறையினர் தீயை அணைத்த பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனுக்கு 60% தீ காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.