இது என் நம்பர் இல்லை: தனுஷ் மேனேஜர் விளக்கம்
சென்னை: தனுஷுடன் அட்ஜெஸ்மெண்ட் செய்தால் சினிமாவில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மேனேஜர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததாக டிவி நடிகை மான்யா ஆனந்த் கூறியது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சர்ச்சையான நிலையில் நேற்று இதுகுறித்து விளக்கமளித்த மான்யா ஆனந்த், “நான் பேசிய நேர்காணலில், வாய்ப்பு தருவதாக அழைத்த நபர், உண்மையிலேயே தனுஷ் குழுவை சேர்ந்தவரா என தெரியவில்லை என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், தவறான செய்திகள் பரவி வருகின்றது. தயவு செய்து இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்தாண்டு ஜனவரி 31ம் தேதி மற்றும் இந்தாண்டு பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் எனது சோசியல் மீடியாவில் ‘வுண்டர் பார் பிலிம்ஸ்’ என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்திருந்தேன். 9598746841 மற்றும் 7598756841 ஆகிய எண்களில் இருந்து வரும் கால், மெசேஜ் அனைத்தும் போலியானவை. இந்த எண்களில் இருந்து எனது புகைப்படத்தை பயன்படுத்தி யாரேனும் சினிமா வாய்ப்பு தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.