தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு: வேந்தர் சீனிவாசன் புத்தகப்பை வழங்கினார்
சென்னை: செங்கல்பட்டு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி (பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்கலை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், அண்ணா பல்கலை பேராசிரியர் கவுரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். துணை வேந்தர் ரஞ்சன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றார்.வேந்தர் சீனிவாசன் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் அடங்கிய பையை வழங்கி பேசுகையில், ‘‘மாணவர்கள் படிப்பில் மிகவும் ஆர்வமுடன் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள், ஆசிரியர்களை மதித்து ஒழுக்கமுடன் இருக்க வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீலராஜ், அறக்கட்டளை உறுப்பினர் ராஜ பூபதி, துணை வேந்தர் ரஞ்சன், பதிவாளர் தனசேகரன் தேவராஜ், தனலட்சுமி சீனிவாசன் குழும நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.