டிஜிபி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தல்
சென்னை: டிஜிபி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி - விசிகவினர் மோதிக்கொண்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
மேலும் வெளியான சில கட்டுப்பாடுகள்; "இந்த அடையான அட்டை வளாகத்திற்குள் இருக்கும்போது அட்டை தெளிவாக தெரியும் வகையில் அணியப்பட வேண்டும்.
பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நிர்வாக அனுமதி இல்லாத பகுதிகளில் செல்லக்கூடாது.
அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ அல்லது ஒலி பதிவு செய்யக்கூடாது.
ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டுவர அனுமதி இல்லை.
பாதுகாப்பு பணியாளர்களின் உத்தரவை பின்பற்றி அனைத்து பாதுகாப்பு அடையாளங்கள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றவும்.
உங்கள் அலைபேசியை அமைதியாக (சைலன்ட்) நிலையில் வைத்திருங்கள்.
பார்வையாளர்கள் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறும்போத தங்களது அடையாள அட்டையினை ஒப்படைக்க வேண்டும்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல் கவனிக்கப்பட்டால் பாதுகாப்பு ஊழியர்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும்.
தலைமை அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள். பார்வையாளர்களின் விடுமுறைகளான உடை விதமுறைகள். ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளும் விதிமுறைகள் மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.