ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் உருவாக்கம் - டிஜிபி
மதுரை : 108 அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது காவல்துறையினர் வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்து மிகுதியான சாலைகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement