திமுக ஆட்சியில்தான் தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் வகையில் திட்டம். வீட்டிலேயே இருந்தபடி, ஆன்லைனில் விண்ணப்பித்தால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடன் வரவு வைக்கப்படும் என தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை திமுக ஆட்சிதான் கொண்டு வந்தது. நாட்டிலேயே முதன்முறையாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெறும் திட்டம் தொடக்கம். காலதாமதமின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். திமுக ஆட்சியில்தான் தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.