தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். நெல்லை தேவர்குளம் காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் போலீசார் அத்துமீறி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. காவல்நிலைய செயல்பாடுகளை கண்டித்து நேற்று ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் முற்றுகை போராட்டம் என அறிவித்திருந்தனர். வன்னிக்கோனேந்தல் சாலையில் ஊராட்சி துணைத் தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் மீது தடியடி நடத்தி கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வைகோ தெரிவித்தார்.