தேவாலாவில் தார் கலவை ஆலையின் மதில் சுவர் இடிந்து வீடுகள் சேதம்
பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தார் கலவை ஆலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்தன.பந்தலூர் அருகே தேவாலாவில் உள்ள தனியார் தார்கலவை ஆலையின் மதில் சுவர் நேற்று இடிந்து அருகில் உள்ள சௌக்கத்தலி என்பவரது வீடு சேதமானது.
சம்பவ இடத்திற்கு கூடலூர் ஆர்டிஓ குணசேகரன் மற்றும் தேவாலா டிஎஸ்பி மற்றும் வருவாய்துறையினர், போலீசார் சென்று சேதம் குறித்து பார்வையிட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆபத்தான நிலையில் மதில் சுவர் இருப்பதாக ஏற்கனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என வாக்குவாத்தில் ஈடுபட்டனர். ஜெசிபி இயந்திரம் வைத்து சீரமைக்கும் பணியை மெற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்ததோடு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.