நாடு முழுவதும் கடந்த 2 மாதத்தில் 808 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
டெல்லி: நாடு முழுவதும் தொடர்ந்து 6 ஆண்டு தேர்தலில் போட்டியிடாத 474 கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கியது. கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு இருக்க வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்ற தவறிய பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆக.9ல் முதற்கட்டமாக நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளை நீக்கியது. மொத்தம் சேர்த்து 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 359 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டதற்கான வரவு செலவு கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் தேவையற்ற முறையில் நீக்கம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளால் நீக்கம் செய்யப்பட்ட கட்சிகளிடம் இருந்து விளக்கம் பெற வாய்ப்பு தரப்படும்