கணக்கில் வராத ரூ.3.24 லட்சம் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (44). இவர் வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொ) பணியாற்றி வருகிறார். இவர், பத்திரப்பதிவுக்காக வரக்கூடிய பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவரை கண்காணித்து வந்தனர். கடந்த 28ம் தேதி காரில் சென்ற அசோக்குமாரை, நரிக்குடியில் நிறுத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் கணக்கில் வராத ரூ.3.24 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அசோக்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement