தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கைத்தறித்துறையின் சார்பில் நடைபெற்ற 11வது தேசிய கைத்தறி நாள் விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

 

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைத்தறித்துறையின் சார்பில் நடைபெற்ற 11 வது தேசிய கைத்தறி நாள் விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். உங்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக நடைபெறுகின்ற 11-ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்று உங்களையெல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் அண்ணன் காந்தி அவர்களுக்கும் மற்றும் துறையினுடைய அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும். வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில், உடுத்த உடை என்ற தேவையை பூர்த்தி செய்து வருகின்ற நெசவாளர்களுக்கும், திராவிட இயக்கத்திற்கும் இடையேயான உறவு இன்றைக்கு நேற்று உருவானது அல்ல. குறிப்பாக, 70 ஆண்டுகளுக்கு முன்பே நெசவாளர்களுடைய துயர் துடைப்பதற்காக களத்தில் நின்ற வரலாறு நம்முடைய கழகத்திற்கு உண்டு.

1953-ஆம் ஆண்டில் தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை, பேரறிஞர் அண்ணா தெருத்தெருவாக சென்று விற்றார். இங்கே சென்னையிலே நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஒருநாள் முழுவதும் விற்பனை செய்தார்கள். அன்றைக்கு, அண்ணா, கலைஞர், அவர்களுடைய தம்பிகள் எல்லாம் சேர்ந்து ஒரே நாளில் விற்பனை செய்த தொகை எவ்வளவு தெரியுமா? மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்! அந்த காலத்தில் இது மிகப் பெரிய தொகை. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாயைத் தாண்டும். இதில் சென்னையில் கலைஞர் மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு கைத்தறித் துணிகளை விற்றார்கள். நெசவாளர்களுடைய வாழ்க்கை நிலை, அவர்களுடைய கவலைகளை முற்றிலும் உணர்ந்தவராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருந்தார்கள். அதனால் தான். கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதெல்லாம் வாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு நெசவாளர்களுடைய திட்டங்களை ஒவ்வொரு முறையும் தந்தார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டிலே சுமார் 2 இலட்சம் கைத்தறிகள் இருக்கின்றன. இரண்டரை லட்சம் நெசவாளர்கள் அதில் பணியாற்றுகிறீர்கள். கைத்தறிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவிலேயே அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பிறகு இன்றைக்கு தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற கைத்தறி துணிகளுக்கு இன்று உலகளவில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, நம்முடைய காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் புடவைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி புடவைகள், உள்ளிட்ட 10 கைத்தறிப் பொருட்களுக்கு GI என்று சொல்லப்படுகிற புவிசார் குறியீடு இன்றைக்கு கிடைத்திருக்கின்றது. கைகளால் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களுக்கு எப்போதும் ஒரு தனி மார்க்கெட் உண்டு. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் 1,146 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கைத்தறி நெசவாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள், போன்றவற்றை புதிய டிசைன்ஸ் ஏற்படுத்தினால் குறித்த அவர்களால் விழிப்புணர்வு மென்மேலும் சாதிக்க முடியும். அப்படிப்பட்ட அளப்பரிய பணியைத் தான் நம்முடைய கைத்தறித் துறை அமைச்சர் அண்ணன் காந்தி இன்றைக்கு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அரசினுடைய இலவச வேட்டி, சேலை ஆர்டர்களின் மூலமும், பள்ளிக் குழந்தைகளுக்கான uniform துணிகளுக்கான ஆர்டர்கள் தமிழ்நாட்டின் கைத்தறித் துறை என்பது மிக, மிகப் பாரம்பரியமான ஒரு துறை. இதனை மென்மேலும் வளர்த்தெடுத்து, நெசவுத் தொழிலையும், நெசவாளர்களுடைய வாழ்வையும் முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு. அந்தப்பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம் என்று கூறி, இந்த வாய்ப்புக்கு மீண்டும் நம்முடைய அமைச்சர் அண்ணன் காந்தி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து, விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

 

Related News