துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று மதியம் 2 நாள் பயணமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமானத்தில் புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று மதியம் 2.30 மணியளவில் இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். மாலை 5.20 மணியளவில் புதுடெல்லி விமானநிலையம் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்றிரவு புதுடெல்லியில் தங்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து நாளை (7ம் தேதி) மாலை சென்னைக்குத் திரும்புகிறார். புதுடெல்லியில் நாளை இவரது விளையாட்டுத் துறை சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுடெல்லி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.