தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர்களுக்கான அடித்தளப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் புதியதாக பணியில் சேர்ந்துள்ள உதவிப் பொறியாளர்களுக்கும் மற்றும் பதவி உயர்வு பெற்ற இளநிலைப் பொறியாளர்களுக்கும், அடித்தளப் பயிற்சி வகுப்பை, சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
Advertisement

சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , இன்று (18.6.2024), நெடுஞ்சாலைத்துறையில் புதியதாக பணியில் சேர்ந்துள்ள உதவிப் பொறியாளர்களுக்கும் மற்றும் பதவி உயர்வு பெற்ற இளநிலைப் பொறியாளர்களுக்கும் அடித்தளப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

“நீங்கள்‌ஒன்றைச்‌சொன்னால்‌, கேட்டு அதை மறந்து விடுவேன்;‌ கற்பித்தால்‌அதை நினைவில்‌கொள்வேன்; என்னை ஈடுபடுத்தினால்‌நான்‌அதைக்‌கற்றுக்‌ கொள்வேன்; என்று பயிற்சியின்‌பெருமையைப்‌பற்றி பெஞ்சமின்‌பிராங்கிளின்‌ என்ற அறிஞர்‌எடுத்துரைத்துள்ளார்‌ அதுபோல, பொறியாளர்களுக்குப்‌ பயிற்சி மிகவும்‌முக்கியம்‌என்று அமைச்சர் வலியுறுத்தினார்கள்‌.

பயிற்சி பற்றி இந்திய சாலைகள்‌குழுமம்‌விரிவான வழிகாட்டுதல்களை IRC:128-ல் வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களின்‌பின்னுரையில்‌கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

புதிதாக பணியில் சேர்ந்த பொறியாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை உள்சூழலை நன்கு தெரிந்திருக்க இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இது நடைமுறைகள், நடத்தை விதிகள், கொள்கைகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதவுகிறது. ஏராளமான வழிகாட்டிக்‌குறிப்புகளும்‌, கையேடுகளும்‌சாலைப்‌ பணிகள்‌நிர்வாகம்‌குறித்து இந்திய சாலைகள்‌குழுமத்தால்‌ அவ்வப்போது வெளியிடப்படுகிறது. சாலைப்‌பணிகள்‌ செயலாக்கத்திற்கும்‌வழிகாட்டிக்‌குறியீடுகளுக்கும்‌இடைவெளி இருக்கத்தான்‌செய்கிறது. அந்த இடைவெளியினை நிரப்புவதற்கு ஒவ்வொரு சிறப்புப்‌பிரிவிலும்‌பயிற்சிகள்‌மிகவும்‌அவசியம்‌ என்று அமைச்சர் எடுத்துரைத்தார்கள்.

கல்லூரிகளில்‌பொறியியல்‌பாடங்களைப்‌படிப்பதென்பது வேறு; தேர்ந்த அனுபவம்‌மிக்க பொறியாளரிடம்‌நுணுக்கங்களைக்‌கற்றுக்‌ கொள்வதென்பது வேறு, பொறியாளர்கள்‌பயிற்சிகளின்‌மூலமாக நுட்பங்களைக்‌கற்றுத்‌தேர்ச்சி பெறவேண்டுமென்று விரும்புகிறேன் என்றும், மனித வள மேம்பாட்டில் பயிற்சி ஒரு அடிப்படைக் கருத்தாகும். இது அறிவுறுத்தல் மற்றும் பயிற்சி மூலம் ஒரு குறிப்பிட்ட திறனை விரும்பிய தரத்திற்கு வளர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளது. பயிற்சி என்பது மிகவும் பயனுள்ள கருவியாகும். பெரிய நிறுவனங்கள்‌பணியாளர்களின்‌பயிற்சிகளுக்காகப்‌பெரிய அளவில்‌நிதியைச்‌செலவு செய்கிறார்கள்‌.

பெரும்பாலும்‌ ஆராய்ச்சியையும்‌வளர்ச்சியையும்‌சேர்த்து ஒரே பிரிவாக வைத்து பணியாளர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள்‌. அந்த அடிப்படையில்தான்‌நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையமும்‌ பயிற்சி மையமும்‌இணைந்து செயல்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்கள்.

பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கான பணியாளரின் திறன்களை அதிகரிக்கும் செயல் ஆகும்.

பெரிய நிறுவனங்களில் ஆண்டுதோறும்‌மொத்தப்‌பணி நேரத்தில்‌ஏறக்குறைய 5 விழுக்காடு பணிநேரம்‌பயிற்சிக்காக ஒதுக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையில் ‌பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்‌ என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன வசதிகளுடன்‌ நெடுஞ்சாலைத்துறைப்‌ பயிற்சி மையம்‌அமைந்துள்ளது, அந்த வசதிகளை‌பயன்படுத்தி நெடுஞ்சாலைதுறை‌பொறியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளில்‌பயிற்சிகள்‌வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்கள்.

எந்தவொரு நிறுவனமும்‌திறமையான பணியாளர்களைப்‌பெற்றிருந்தால்தான்‌ நன்கு வளரமுடியும்‌. 2022 ஆம் வருடம் தொடங்கி, 5 ஆண்டுகளில் துறையின் அனைத்துப் பொறியாளர்களுக்கும் மற்றும் பிற அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கும் வகையில், விரிவான பயிற்சித் திட்டம் (CTP) வடிவமைக்கப்பட்டுள்ளது. விரிவான பயிற்சித் திட்டம் 25.4.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது இப்பயிற்சி திட்டமானது, மொத்தம் 27 தலைப்புகளில் வகுக்கப்பட்டு, இத்துடன் பொறியாளர்களுக்கம், ஊழியர்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது என்றும், 2023-24 ஆம் ஆண்டில், 1,150 பொறியாளர்களுக்கும், 646 தொழில்நுட்ப சாராத அலுவலர்களுக்கும், பல்வேறு தலைப்புகளில் பயிற்சித்திட்டத்தின்படி, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 துணை ஆட்சியர்களுக்கும், தலைமை செயலகத்தின் 110 பிரிவில் உள்ள 24 அலுவலர்களுக்கும் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2024-2025 ஆம் ஆண்டில், இதுவரை 108 பொறியாளர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயிற்சிகளின் போதும், காலை வேளையில் யோகா மற்றும் தியான வகுப்புகள், சிறந்த யோகா ஆசிரியர்களால் மனதும்-உடலும் சிறக்க வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு நன்கு ஆலோசித்து உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளை துறையில் புதிதாக இணைந்துள்ள பொறியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்கள். இப்பயிற்சி வகுப்புத் தொடக்க விழாவில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமையுரையாற்றினார்.

விழாவில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டின் திட்ட இயக்குநர் மருத்துவர் இரா.செல்வராஜ் , நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் க.சேகர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர்(கூ.பொ), இரா.சந்திரசேகர், தலைமைப் பொறியாளர்(நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) மா.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News