டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Advertisement
சென்னை: டெங்கு காய்ச்சலை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மக்களின் நலன் கருதி மருத்துவமனையின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளில் குளோரின் தெளிப்பதுடன், கழிவுநீர் கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement