ஜனநாயக கட்சியின் மாநாடு வரை பொறுத்திருங்கள் கமலா ஹாரிஸ் உடனான விவாதத்தை தவிர்க்கும் டிரம்ப்
மேலும் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் இருந்து விலக கோரி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புடன் நேரடி விவாதத்துக்கு தயார் என்று கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். இது குறித்து ஹூஸ்டனில் இருந்து திரும்பிய கமலா ஹாரிஸ் கூறுகையில், ‘‘டிரம்புடன் நான் விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன். அவர் முன்பு என்னுடனான விவாதத்துக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது பின்வாங்குகிறார்” என்று தெரிவித்தார். இது குறித்து டிரம்பின் பிரசார தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜனநாயக கட்சிக்குள் அரசியல் குழப்பம் நிலவி வருகின்றது.
இதன் காரணமாக அக்கட்சியினர் தங்களது வேட்பாளரை முறையாக முடிவு செய்யும் வரை பொதுத்தேர்தல் விவாதத்தை இறுதி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார். மில்வாக்கியில் நடந்த குடியரசு கட்சியின் மாநாட்டில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதேபோல் ஆகஸ்ட்டில் சிகாகோவில் நடக்கும் ஜனநாயக கட்சியின் மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட உள்ளார்.