கூடலூர் பகுதியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை
சாலை ஓரங்களில் இன்னும் பல இடங்களில் மழைக்காலத்தில் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் காணப்படுகின்றன. இதே போல் வீடுகள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் மீது விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் தொடர்ச்சியாக பெய்த காற்றுடன் கூடிய மழை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் அடித்தது. கூடலூர் பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.