ரோட் ஷோவால் தாமதம் மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பிய டெல்லி முதல்வர்: டெல்லி தேர்தலில் பரபரப்பு
Advertisement
பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்காஜி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவர் ரோட் ஷோ நடத்தினார். சிசோடியாவுடன் திறந்த காரில் சென்ற அடிசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அதில் கூடுதல் நேரம் ஆனதால் வேட்பு மனு தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் அவரால் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை. அதற்கு பதில், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
Advertisement