டெல்லியில் நெருங்கிய நிலையில் செல்பி எடுக்க வந்த வாலிபர் தள்ளி விட்ட ஜெயாபச்சன்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பின் வாசலில் சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயாபச்சன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மிசா பாரதி, சிவசேனா(உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஒரு வாலிபர், ஜெயாபச்சன் எம்பியை நெருங்கி செல்பி எடுக்க முயன்றார். அப்போது ஜெயாபச்சன் எம்பியை அவர் மிகவும் நெருங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயாபச்சன், அந்த வாலிபரை தள்ளி விட்டு திட்டினார். மேலும் அவரிடம் இது என்ன என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதுபற்றிய வீடியோ இணையதளங்களில் வைராகி வருகிறது.