டெல்லி செங்கோட்டையில் யுனெஸ்கோ பாரம்பரிய கூட்டம்: டிச. 5 முதல் 14ம் தேதி வரை பொதுமக்கள் வருகைக்கு தடை
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் முதல் முதலாக அரிய பாரம்பரிய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த யுனெஸ்கோவின் கூட்டத்தை அரசு நடத்துகின்றது. இந்த முக்கிய கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றது. இந்த கூட்டம் வருகின்ற 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு 17ம் நூற்றாண்டை சேர்ந்த செங்கோட்டையானது டிசம்பர் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படுகின்றது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் தேதி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின் சுமார் ஒரு மாதத்துக்கு பின் யுனெஸ்கோ கூட்டம் நடைபெறுகின்றது. எனவே செங்கோட்டை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.