கனமழை காரணமாக டெல்லியில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து : 7 பேர் உயிரிழப்பு!!
02:39 PM Aug 09, 2025 IST
டெல்லி : கனமழை காரணமாக தென்கிழக்கு டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள ஹரி நகரில் கோவிலை ஒட்டிய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.