டெல்லியில் அக்.18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. டெல்லியில் காற்று மாசு தீவிரமாக நிலவும் நிலையில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் விற்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதி வழங்கியது. பசுமை பட்டாசுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
அனுமதிக்கப்பட்ட 4 நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பசுமை பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறைந்துள்ளதால் அவ்வகை பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி என்.சி.ஆர். பகுதியில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்.
பசுமை பட்டாசு உற்பத்தியை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். . பசுமை பட்டாசுகளுக்கான க்யூஆர் கோடுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். போலி பட்டாசுகள் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.