டெல்லி எம்பிக்கள் குடியிருப்பில் தீ
புதுடெல்லி: டெல்லி பீஷாம்பார்தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்பிக்களுக்கான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 14 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 3ஆம் தளத்தில் வசித்து வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement