6 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுவதன் காரணமாக நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது அதில் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு விற்பனை வெடிப்பது மற்றும் அவற்றை சேமித்து வைப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான தடை என்பது விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில்,\\” முந்தைய ஆண்டுகளில் காற்றின் தர குறியீடு என்பது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால், தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய இடைக்கால அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது . அதேபோல தீபாவளிக்கு முந்தைய நாளும் தீபாவளி அன்றுமான அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை யிலும்,இரவிலும் தலா 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்க இடைக்கால அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்கள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.