அவசர அவசரமாக டெல்லி சென்று திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திடீர் அவசர பயணமாக, டெல்லிக்கு நேற்று புறப்பட்டு சென்று விட்டு மாலையே சென்னைக்கு திரும்பினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீர் பயணமாக, சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். திடீர் பயணமாக நேற்று காலை 6 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்ற மாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால் தனது சொந்த பயணமாக டெல்லிக்கு சென்று விட்டு நேற்று மாலையே சென்னைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement