டெல்லியில் நண்பனை துப்பாக்கியால் சுட்ட 11ம் வகுப்பு மாணவன்
குருகிராம்: டெல்லி குருகிராமில் உள்ள பாஷ் ஹவுசிக் சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தி, தன் நண்பனான சக மாணவரை சுட்டுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அங்கிருந்து ஒரு துப்பாக்கி, 70 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் கூறுகையில், “பள்ளியில் 2 மாதத்துக்கு முன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக என் மகனை தன் வீட்டுக்கு அழைத்து அவனது பள்ளித் தோழன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்” என குற்றம்சாட்டி உள்ளார்.