டெல்லி மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு
புதுடெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி காலத்தில் 2018 முதல் 2019 வரை ரூ.5590 கோடி மதிப்பீட்டில் 24 மருத்துவமனை கட்ட நிதி ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜேந்திர குப்தா குற்றம் சாட்டியிருந்தார்.
Advertisement
இதுதொடர்பாக டெல்லி காவல்துறை ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஜூன் 26 வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சவுரப் பரத்வாஜின் இல்லம் உட்பட டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
Advertisement