தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி தரும் நெருக்கடியால் தந்தையை சமாதானப்படுத்த அன்பான மகன் படும்பாட்டை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘துணை ஜனாதிபதி வேட்பாளர் பற்றி டெல்லி தன்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என கடும் கோபத்தில் இருப்பது யாரு..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘துணை ஜனாதிபதி தேர்தலில், கூட்டணி கட்சி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தாமரை அறிவிச்சிருக்கு.. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியை அறிவிச்சிருக்காங்க.. இவரும் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து ஆதரவு திரட்டிட்டு போயிருக்காரு... தாமரை கூட்டணியில வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட இலைக்கட்சியும் இருக்குதாம்.. ஆனால் வேட்பாளர் யாரு என்பது குறித்து, தன்னிடம் எந்த ஆலோசனையும் டெல்லி கேட்கலை என்று கடும் கோபத்தில் இருக்கும் இலைக்கட்சி தலைவர், அதனை வெளியே காட்டாமல் சிரித்துக்கிட்டே இருக்காராம்.. மம்மி இருந்திருந்தா, இப்படி கேட்காம இதுபோன்ற முடிவை யாராவது எடுப்பாங்களா என்ற ஆத்திரமும் அவருக்கு இருக்குதாம்.. இந்நிலையில் தமிழ்நாட்டில் இலைக்கட்சி தலைவரை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக தாமரை வேட்பாளர், ரெண்டு நாட்கள் சென்னையில முகாமிடும் வகையில் சுற்றுப்பயண பட்டியலை வெளியிட்டிருக்காரு.. அந்த நாட்கள் இலைக்கட்சி தலைவர் ஊர் சுற்றும் பயணம் செல்லாத நாட்களாம்.. ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கியிருக்கும் இலைக்கட்சி தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு போச்சாம்.. இதனால மாங்கனி ஊரில் ஓய்வு எடுத்து வரும் இலைக்கட்சி தலைவர், துணை ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்க நேரமில்லை என கூறி விட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க... தான் யார் என்பதை தாமரை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், எதுவாக இருந்தாலும் தன்னிடம் கேட்டுதான் முடிவு எடுக்க வேண்டும் என்பதையும், சொல்லாமல் சொல்லி டெல்லிக்கு புரிய வைக்கும் வேலையில் எங்களது தலைவர் கனகச்சிதமா செயல்படுவதாக இலைக்கட்சி தொண்டர்கள் சொல்றாங்க.. இலைக்கட்சி தலைவரின் இந்த திடீர் முடிவால் வேட்பாளர் ரொம்பவே இடிஞ்சி போனதாகவும் பேசிக்கிறாங்க.. இதனால் சென்னை வரும் அவரது சுற்றுப்பயண திட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக இலைக்கட்சிக்காரங்க உறுதியா சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் காக்கி அதிகாரி மிரட்டலால் வாயடைத்து போனாங்களாமே உயர் காக்கிகள் என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல தண்டத்துல தொடங்கி பட்டுல முடியுற காக்கிகள் நிலையம் இருக்குது.. இந்த எல்லையில இருக்குற ஏரிகள்ல இருந்து வண்டல் மண்ணை தடையில்லாம அள்ளி வியாபாரம் ெசய்றாங்களாம்.. இதுல அந்த பட்டுல முடியுற காக்கிகள் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில மண் எடுத்ததாக ஜேசிபி, டிராக்டர்னு லேடி ஸ்டார் காக்கி போனவாரம் வாகனங்களை பறிமுதல் செஞ்சாங்களாம்.. பறிமுதல் செய்தவுடனே பேரமும் நடந்திருக்குது.. பேரம் படிஞ்சதுல, ஒரு வாகனத்துக்கு 80கே ரேட் பேசி முடிச்சாங்களாம்.. சொன்னபடியே 80கேவும் பரிமாற்றப்பட்டதாம்.. கேட்டது கிடைச்சதும், பறிமுதல் வாகனங்கள் ரிலீஸ் செய்யப்பட்டதாம்.. வழக்கு ஏதும் பதியாமல் பத்திரமாக அனுப்பி வெச்சிட்டாங்களாம்.. அந்த காக்கிகள் நிலையத்துல பணிபுரியும் சக காக்கிகள் இந்த 80கே பேரத்தை சொல்லி, சொல்லி புலம்பியிருக்காங்க.. இந்த விஷயம் உயர் காக்கிகள் காதுக்கு எட்டியிருக்குது.. உடனே உயர் காக்கிகள் இதுகுறித்து லேடி ஸ்டார் காக்கியிடம் கேட்டிருக்காங்க.. அதுக்கு அந்த லேடி காக்கி, பெண் அதிகாரியை இப்படி இழிவுபடுத்தி பேசுகிறீர்களே, உங்கள் மீது என் இறப்புக்கு காரணம் உயர் அதிகாரிகள் தான்னு எழுதி வெச்சிட்டு இறந்துவிடுவேன்னு மிரட்டுறாங்களாம்.. இதனால உயர்காக்கிகள் என்னம்மா நீங்களே இப்படி செய்யலாமா, சொல்லலாமா என்று வாயடைத்து போயிருக்காங்களாம்.. இந்த காக்கிகள் மேட்டர் கிரிவலம் மாவட்டத்துல ஹாட்டாக பேசப்படுது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி ஊரில் பிரமாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்து போன தேனிக்காரர் ஏமாற்றம் அடைஞ்சிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியில் இருந்து பிரிக்கப்பட்ட தேனிக்காரர், அவருக்கென ஒரு பிடிமானம் இல்லாத நிலையில், தொண்டர் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்திக்கிட்டு இருக்காரு.. அதையும் முறையா பதிவு செய்யலன்னு சொல்றாங்க.. அதிலிருப்பவர்கள் எல்லோருமே இலைக்கட்சியை சேர்ந்தவர்கள் தானாம்.. என்றாவது ஒருநாள் இலைக்கட்சி ஒன்று சேர்ந்திடாதான்னு தான் இருக்காங்களாம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ அது ஒரு இலவு காத்த கிளியின் கனாக்காலமுன்னு இரும்பா இருக்காராம்.. இந்த நிலையில் இலைக்கட்சி தலைவர், நெடும்பயணத்தின் இடையே சொந்த ஊரில் ஓய்வில் இருக்காராம்.. இச்சூழலில் தேனிக்காரரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மாங்கனி ஊரில் நடந்துச்சாம்.. இதில் கலந்துகொள்வதற்காக தேனிக்காரர் வந்தாராம்.. சிங்கத்தின் ஊருக்கு போறோம், வரவேற்பு தூளாக இருக்குமுன்னு நினைச்சாராம்.. ஆனால் அவரது தொண்டர்கள் எண்ணிக்கையில் இரட்டை இலக்கை கூட தாண்டலையாம்.. இதற்கு பின்னணி ஒன்னு இருக்குதுன்னு மீட்புக்குழு தொண்டர்கள் சொல்றாங்க.. இந்த மீட்புக்குழுவுல 5 மாவட்ட செயலாளர்கள் இருக்காங்களாம்.. அவர்களில் எல்லோருமே செல்வந்தர்கள் தான் என்றாலும், ஒருவர் மட்டுமே செலவு செய்வாராம்.. தேனிக்காரர் வந்தால் அவரை வரவேற்க இளைஞர்கள் பட்டாளத்தை இறக்கி, டூவீலரில் அழைச்சிக்கிட்டு வருவாராம்.. இதற்காக சில லட்சங்களை செலவு செய்வாராம்.. ஆனால் இதற்கான நல்லபெயரை இன்னொரு மாவட்ட செயலாளர் தட்டிக்கிட்டு போயிடுவாராம்.. இதனால துட்டை தட்டி விட்ட மா.செ. ரொம்பவே கவலையடைவாராம்.. இதனால் இம்முறை கூட்டத்தோடு கூட்டமா போய் நிற்போமுன்னு, பட்டு துண்டோடு சென்று ஜகா வாங்கிட்டாராம்.. இதனால வரவேற்பில் ஒரு பிரமாண்டம் இல்லாம போச்சாம்.. அதே நேரத்தில் சிங்கம் வாழும் காட்டில் வேறு யாரும் நுழைஞ்சிட முடியாதுன்னு இலைக்கட்சிக்காரரின் அடிபொடிகள் நெஞ்சை நிமுத்துறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒன்றுபட்ட சேலத்துக்கனிதான் வேண்டும் என டெல்லி புது நெருக்கடி கொடுக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துக்கனியில் தந்தை, மகன் மோதலை நிறுத்த முடியாமல் கட்சியின் முன்னணிகள் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல, மலராத கட்சியோ அன்பு மணியானவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துட்டு வருகிறதாம்.. ஒன்றுபட்ட கனியுடன் கூட்டணி வைக்க முடியும் என்பதுதான் அந்த நிபந்தனையாம்.. இதற்கான எல்லா நகர்வுகளையும் விரைவாக எடுத்து தந்தையை சமாதானப்படுத்த டெல்லியிலிருந்து சிலர் அன்பானவரிடம் பேசி உள்ளார்களாம்.. தனது தாயார் மூலமாக சில நகர்வுகளை அன்பானவர் முன்னெடுக்க தொடங்கி இருக்கிறாராம்.. முதல்கட்டமாக தந்தையின் சில தனிபட்ட விஷயங்கள் சில நாட்களாகவே கிளறப்படுகிறதாம்.. இதனால் கடும் அப்செட் ஆன தந்தையானவர், யாரையும் சந்திக்காமல் மவுன புரட்சி நடத்தி வருகிறாராம்.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது தந்தை, மகன் இடையிலான அரசியல் பகையை முடிவுக்கு கொண்டுவந்துவிட வேண்டுமென்பதில் தாயாரும் முனைப்புடன் உள்ளாராம்.. சமாதானம் பேச தனது மனைவியுடன் தந்தையானவர் சென்னைக்கு விசிட் அடிப்பாரா அல்லது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக பல்டி அடிப்பாரா என்ற சலசலப்பு சேலத்துக்கனி வட்டாரத்தில் நிலவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement

Related News