தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் 3 தீவிரவாத டாக்டர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது என்ஐஏ: 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளான 3 டாக்டர்கள் மற்றும் மத பிரச்சாரகரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் வெடிகுண்டு தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். காரில் வெடிபொருட்களுடன் தாக்குதலை நடத்திய காஷ்மீர் டாக்டர் உமர் உன் நபி உடல் சிதறி இறந்தான்.

Advertisement

இந்த வழக்கில் டாக்டர்கள் குழு தீவிரவாத சதித்திட்டம் தீட்டியது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீர் போலீசார், அரியானா அல் பலா பல்கலைக்கழக பேராசிரியர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முசம்மில் ஷகீல் கனாயி, அனந்த்நக்கை சேர்ந்த டாக்டர் அதீல் அகமது, லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் மத பிரச்சாரகர் மால்வி இர்பான் அகமது வாகே ஆகியோரை கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான இவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. 4 பேரையும் டெல்லிக்கு அழைத்து வந்த என்ஐஏ அதிகாரிகள் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதுவரை டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆகி உள்ளது. இதற்கு முன், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் பதிவாகி இருந்த அமிர் ரஷித் அலி என்பவனையும், ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த தொழில்நுட்ப உதவிகளை செய்ததாக ஜாசிர் பிலால் வானி எனும் டேனிஷையும் என்ஐஏ கைது செய்திருந்தது.

* அல் பலா குழு நிறுவனரின் பூர்வீக வீட்டிற்கு நோட்டீஸ்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடைய அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகம் மற்றும் அதன் குழுமத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ரூ.415 கோடி கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டு குழும நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்துள்ளது. இந்நிலையில், சித்திக்கின் குடும்ப பூர்வீக வீடு மத்தியபிரதேசத்தின் மோவ் பகுதியில் உள்ளது.

இந்த வீடு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக மோவ் கன்டோன்மென்ட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கனவே 1996, 1997ல் பலமுறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அடுத்த 3 நாளில் வீட்டை இடிக்காவிட்டால் கன்டோன்மென்ட் சார்பில் வீட்டை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Advertisement