தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி தாக்குதல் தீவிரவாதிகளுடன் தொடர்பு மருத்துவ கல்லூரி பேராசிரியர் மாணவர் உபியில் அதிரடி கைது: பாதுகாப்பு படை தேடிய பெண் டாக்டர் கார் அரியானாவில் சிக்கியது

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மருத்துவ பேராசிரியர், மாணவர் நேற்று உபியில் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 13 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தவர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முகமது உமர் நபி (28). பரிதாபாத்தில் 2900 கிலோ வெடிபொருட்களுடன் காஷ்மீரை சேர்ந்த முசம்மில் அகமது மற்றும் அதீல் அகமது, ஷாஹீன் சயீத் உள்ளிட்ட டாக்டர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காரில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளுடன் தற்கொலை தாக்குதலை உமர் நபி நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவர்கள் உட்பட 8 பேரில் 7 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இதில் தொடர்புடைய மூன்று மருத்துவர்களும் 21 நாட்கள் துருக்கியில் இருந்தனர். ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பது வெடித்துச்சிதறிய காரில் கிடந்த உடல் பாகங்கள் மூலம் மேற்கொண்ட டிஎன்ஏ மாதிரி சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் உமர் நபி அடிக்கடி பரிதாபாத் - டெல்லி இடையே பயணம் செய்துள்ளான்.

ராம்லீலா மைதானம் மற்றும் சுனேரி மசூதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். கார் வெடிப்பு நிகழ்ந்த தினத்தில்கூட சுனேரி மசூதி அருகேதான் காரை நிறுத்தி அதன் உள்ளே 3 மணிநேரத்துக்கும் மேலாக இருந்துள்ளான். அதன்பிறகு தான் காரை செங்கோட்டையை நோக்கி ஓட்டி சென்று தாக்குதல் நடத்தி உள்ளான். இதற்கிடையே டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் 3 கார்களை கார் வெடிகுண்டாக வெடிக்க பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது. முதல் காரான ஐ20 டெல்லியில் வெடிக்கப்பட்டது.

2வது கார் சிவப்பு போர்டு ஈக்கோஸ்போர்ட் கார், அரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் கண்டவாலி கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காரை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று அதிகாரிகள் அந்த காரை ஆய்வு செய்தனர். இன்னொரு கார் மாருதி சுசுகி பிரெஸ்ஸா கார் எங்கே என்பதை தேடும் பணியில் பாதுகாப்பு படைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

காணாமல் போன மூன்றாவது காரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் உளவு பார்க்க அல்லது தப்பிக்க பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மூன்றாவது காரை பல குழுக்கள் தேடி வருகின்றன. குறிப்பாக டெல்லி-என்சிஆர் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் மாருதி பிரெஸ்ஸாவைக் கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த கார் காஷ்மீர் பெண் டாக்டர் ஷாஹீனுக்கு சொந்தமானது. அதில் 300 கிலோ வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்பட்டது.

அதிகாரிகள் சோதனைக்கு பிறகு அரியானா மாநிம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இரண்டு சந்தேக நபர்களின் கூட்டாளிகளுடன் தொடர்புடைய வெள்ளி மாருதி பிரெஸ்ஸாவை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அரியானா காவல்துறையின் வெடிகுண்டு செயலிழப்பு குழு தற்போது பல்கலைக்கழக வளாகத்தை ஆய்வு செய்து வருகிறது. காரில் வெடிபொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்ய அங்கு சென்றனர். இதற்கிடையே தாக்குதலுக்கு 32 கார்கள் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீன் சயித்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் கான்பூர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு இதயவியல் மாணவர் முகமது ஆரிப், உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்டார். இவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கைச் சேர்ந்தவர்.

அல் பலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சயீத், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் உபி மாநிலம் ஹாபூர் ஜி.எஸ் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான டாக்டர் ஃபரூக் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவரும் அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை முடித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் துருக்கியில் எந்த பயங்கரவாத அமைப்புடன் இவர்கள் தொடர்பில் இருந்தனர்? என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதியாக கூறவில்லை. இருப்பினும் இந்த பயங்கரவாத கும்பல் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

* வெடித்துசிதறும் சிசிடிவி காட்சி வெளியானது

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமர் டெல்லிக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. டாக்டர் உமர் நபி பதர்பூர் எல்லை சுங்கச்சாவடி வழியாக டெல்லிக்குள் நுழைந்து பின்னர் ராம்லீலா மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு மசூதிக்கு அருகில் நடந்து செல்வதை சிசிடிவி காட்டுகிறது. பதர்பூர் சுங்கச்சாவடியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், உமர் ஒரு வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டிச் சென்று, வெடிப்பு நடந்த நவம்பர் 10 ஆம் தேதி காலை 8.02 மணியளவில் சுங்கச்சாவடியில் நிறுத்துவதைக் காணலாம்.

உமர் பணத்தை எடுத்து, சுங்கச்சாவடி நடத்துபவரிடம் கொடுக்கும்போது கார் சிறிது நேரம் நிற்கிறது. முகமூடி அணிந்திருந்த உமர், சிசிடிவி கேமராவை மீண்டும் மீண்டும் பார்ப்பதும், காரின் பின் இருக்கையில் ஒரு பெரிய பை வைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. அந்த நாளின் பிற்பகுதியில், ராம்லீலா மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு பாதையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு சிசிடிவி காணொளியில், உமர் ஒரு குறுகிய பகுதியில் நடந்து செல்வதையும், பின்னர் சிறிது நேரம் கழித்து பிரார்த்தனை செய்ய சுனேரி மசூதிக்குச் சென்றதும் சிசிடிவியில் தெரிவதை காண முடிகிறது.

அதே போல் குண்டு வெடிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே பொருத்தப்பட்ட போக்குவரத்து சிசிடிவி கேமராவில் பதிவான 11 விநாடிகளே ஓடும் அந்த வீடியோ, காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த தருணத்தில் ஒரு வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 கார் திடீரென வெடித்த தருணத்தை கண்முன் நிறுத்தி அதிர வைத்துள்ளது.

மெதுவாக நகரும் வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை, மின் ரிக்‌ஷாக்கள், ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களால் சூழ்ந்து இருப்பதை காட்டுகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது. அடுத்த விநாடியே அருகில் இருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிய தொடங்குகிறது. அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடுகின்றனர். தூசியும், கரும்புகையுமாக சூழ்ந்து அந்த பகுதியாக இருள் சூழ்ந்த காட்சிகள் உணர்த்துகின்றன. இந்த வெடிவிபத்து அருகிலுள்ள சில கட்டிடங்களையும் சேதப்படுத்தியதும் இடம் பெற்றுள்ளது.

* துருக்கி மறுப்பு

டெல்லி குண்டுவெடிப்பில் துருக்கி உதவி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதை மறுத்து துருக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,’ துருக்கி இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையது மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு தளவாட, ராஜதந்திர மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது என்று கூறும் ஊடக அறிக்கைகள், இருதரப்பு உறவுகளை சேதப்படுத்தும் நோக்கில் தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தியா அல்லது வேறு எந்த நாட்டையும் குறிவைத்து துருக்கி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற கூற்று முற்றிலும் தவறான தகவல். இதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

* உபியில் 2 இடங்களில் மையம் அமைக்க திட்டம்

உளவுத்துறை தகவல் அடிப்படையில் பெண் டாக்டர் ஷாஹீன் ஷைட் உத்தரபிரதேசத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவிற்கு பெண்கள் ஆட்சேர்ப்பு வலையமைப்பை அமைக்க திட்டமிட்டு வந்தார். அவர் சஹாரன்பூர் மற்றும் ஹாப்பூரில் ஆட்சேர்ப்பு மையங்களை அமைக்க முயன்றார். அங்கு முஸ்லிம் பெண்களை தேர்வு செய்து வந்துள்ளார்.

எல்டிடிஇ பாணியில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் மகளிர் பிரிவை உருவாக்க திட்டமிட்டு, அதற்காக விடுதலைப்புலிகள் தொடர்பான கட்டுரைகளை கூட படித்திருப்பதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் அவர் துருக்கி நாட்டிற்கும் சென்று வந்துள்ளார்.

* ரூ.26 லட்சம் பணம் திரட்டிய டாக்டர்கள்

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய டாக்டர்கள் குழுவினர் ரூ.26 லட்சத்திற்கும் அதிகமாக நிதி திரட்டியது தெரிய வந்துள்ளது. டாக்டர் முசம்மில் கனை, டாக்டர் அதீல் அகமது ராதர், டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் டாக்டர் உமர் நபி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களும் பணத்தை திரட்டியுள்ளனர், இந்த பணத்தை டாக்டர் உமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணத்தைப் பயன்படுத்தி, குருகிராம், நுஹ் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் உள்ள சப்ளையர்களிடமிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சுமார் 26 குவிண்டால் என்பிகே உரத்தை அந்தக் குழு வாங்கியதாகக் கூறப்படுகிறது. மற்ற ரசாயனங்களுடன் கலந்த இந்த உரம், ஐஇடி குண்டு தயாரிக்கப் பயன்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* அல் பலா பல்கலைக்கு சிக்கல்

டெல்லி குண்டுவெடிப்பு விசாரணை தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் அல்-பலா பல்கலைக்கழகத்திற்கு, அதன் இணையதளத்தில் தவறான அங்கீகாரத்தைக் காட்டியதற்காக, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில் (நாக்) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம், அல் பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் பதவியை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அல் பலா பல்கலைக்கழகத்தின் அனைத்து பதிவுகளையும் தடயவியல் தணிக்கை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட பிற நிதி புலனாய்வு அமைப்புகளுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

* காஷ்மீரில் 10 பேர் கைது

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3 அரசு ஊழியர்கள் உட்பட சுமார் 10 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனந்த்நாக், புல்வாமா மற்றும் குல்காம் மாவட்டங்களில் இருந்து சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்தில் அவர்களில் சிலர் துருக்கி சென்று வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

* 32 கார்களில் வெடிகுண்டுகள் நிரப்பி டிச.6ஆம் தேதி தாக்க திட்டமா?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் 6 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஸ்விப்ட் டிசையர், போர்டு ஈக்கோஸ்போர்ட் உட்பட 32 கார்கள் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லவும் அல்லது குண்டுகளை வழங்கவும் தயாராக இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* காஷ்மீர் டாக்டருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக காஷ்மீர் காசிகுண்டைச் சேர்ந்த டாக்டர் முசாபருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பிக்க ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்டர்போலை அணுகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News