டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு ஊழலே காரணம் : கார்கே குற்றச்சாட்டு!!
12:17 PM Jun 28, 2024 IST
Share
டெல்லி : டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு ஊழலே காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்தது மோடி அரசின் மோசமான உள்கட்டமைப்புக்கு உதாரணம் என்று கூறிய அவர், அயோத்தி சாலையின் நிலை, ராமர் கோயிலில் மழைநீர் கசிவு, மோர்பி பாலம் இடிந்தது மோசமான நிகழ்வு என்றும் குறிப்பிட்டார்.