தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டெல்லியில் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது

 

டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்தியபோது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்ட எம்பிக்களை கைது செய்தனர். டெல்லியில் பேரணியை போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லியில் சாலையில் அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது கைது செய்தனர் .

சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மஹிபூபா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்தனர். கைது செய்த்த்யு பேருந்தில் ஏற்றியபோதும் பேருந்துக்குள்ளும் எம்பிக்கள் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். டெல்லி போராட்டத்தில் கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் கைது செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல்காந்தி தலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி தொடங்கினர். வாக்கு திருட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் 300 பேர் ஒரு கி.மீ. தூரம் பேரணி நடத்தி வந்தனர்.

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.

இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற்னர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியாக சென்ற எம்.பிக்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதைத்தொடர்ந்து எம்.பிக்களுடன் டெல்லி காவல்துறை பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதற்கிடையே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், இந்தப் பேரணிக்காக இண்டியா கூட்டணி சார்பில் முறையாக அனுமதி கோரியும் விண்ணப்பிக்கப்படவில்லை என டெல்லி போலீஸ் தகவல் தெரிவிக்கின்றன.

இருபினும், இண்டியா கூட்டணி பேரணியை நடத்தி வருகிறது. பேரணியில் ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிஹாரில் நடைபெறு சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் ஏந்திச் சென்றனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்தியபோது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்ட எம்பிக்களை கைது செய்தனர். டெல்லியில் பேரணியை போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லியில் சாலையில் அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது கைது செய்தனர் .

Related News